அரசு ஊழியர்களையும், இராணுவத்தினரையும் குறிவைக்கும் சீன உளவாளிகள்! MI5 எச்சரிக்கை!!
சீன உளவாளிகள் இணையதளங்களில் அரசு ஊழியர்களையும் இராணுவத்தினரையும் குறிவைத்துள்ளதாக MI5 எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய Five Eyes அமைப்பு, லிங்க்ட்இன், இன்டீட் போன்ற இணையத்தளங்களை அவர்கள் குறிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வமானதாகத் தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள், வெளியுறவுக் கொள்கை அல்லது பாதுகாப்பு ஆய்வாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்புகளை பதிவிட்டு அதன் மூலம் தனிப்பட்ட தரவுகளை திருடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேட்பாளருக்கு இரகசியத் தகவல்களை அணுகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், அரசாங்கக் கொள்கை அல்லது இராணுவ உத்தி குறித்த விவரங்கள் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என Five Eyes அமைப்பு எச்சரித்துள்ளது.





