ஹொரணை முதியோர் இல்லத்தில் பாரிய தீவிபத்து – எரிகாயங்களுடன் பலரின் உடல்கள் காணப்படுவதாக தகவல்!
ஹொரணை – பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 55 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் 11 பேர் காணாமல்போயுள்ளதாகவும், எரிந்த நிலையில் பலரின் உடல்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




