யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்துக்கும் ஆளுநருக்கும் தொடர்பா?
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டி இருந்தது.
யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அந்தச் சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.
அதேபோல இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் மேலும் சில தகவல்களும் வெளியாகின.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுநர் அலுவலகம் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளது.





