இலங்கை செய்தி

சங்க நீதிமன்றம் வேண்டும்: ஞானசார தேரர் வலியுறுத்து!

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சங்க நீதிமன்றம் போன்ற பொறிமுறை இன்றியமையாததாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பௌத்தம் என்பது மிகவும் சுதந்திரமான, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு தத்துவமாகும். தனது குருவைக்கூட விமர்சிப்பதற்கு சுதந்திரம் வழங்கிய மதமாகும்.

இத்தகைய தாராளத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு சிலர் பௌத்தத்தையும் பிக்குகளையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பிழைகள் செய்பவர்கள் சமூகத்தில் மிகச் சிலரே. மனிதர்கள் இருக்கும் இடத்தில் பிழைகள் நடப்பது இயல்பு. அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குறைகூறுவது ஏற்புடையதல்ல.
மேலும், நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ‘சங்க நீதிமன்றம்’ அமைப்பது தொடர்பான விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன்.” எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!