லெபனானில் இருந்து வந்த ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தகவல்
லெபனானிலிருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ட்ரோன் ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக தளமான X-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், லெபனானிலிருந்து வந்த ட்ரோன் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து அது வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கு ஒன்று தரையில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று இராணுவம் கூறியுள்ளது.
அதேவேளை, இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் துண்டுகள் கீழே விழுந்திருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, எல்லைப் பகுதிகளில் ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.





