உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்!! பணம் மட்டுமே இலக்கு!

கனடாவில் சுமார் 1000 பேரை கொண்ட இந்தியக் கும்பல் ஒன்று நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் ( Lawrence Bishnoi) என்று அழைக்கப்படும் இந்த கும்பல் தாக்குதல் எச்சரிக்கை அடங்கிய கடிதத்தை ரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள  காவல் நிலையமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளது.

அந்த கடிதத்தில் கனேடிய வணிக நிறுவனங்கள் பணம் செலுத்த மறுத்தல் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த கும்பல் தெற்காசிய சமூகத்தை குறிவைப்பதாகவும், பணம் பறிப்பதை மட்டுமே தனது முதன்மை இலக்காக கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் 33.8 லட்சம் இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியக் குடிமக்கள் வாழ்கின்றனர், இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 8.3 சதவீதமாகும். தற்போது இவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கும்பல் கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்பட்டு வருகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!