ஆயுத கையிருப்பை 04 மடங்காக அதிகரிக்க அமெரிக்கா திட்டம்!
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஒன்று எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல்களை தொடங்க அமெரிக்கா தயங்காது என பாதுகாப்பு செயலளர் பீட் ஹெக்ஸெத் இன்று தெரிவித்துள்ளார்.
மத்தியக்கிழக்கில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் நாங்கள் முழுத் தகுதியுடன் இருக்கிறோம். “அதற்குத் தேவையான ஆயுதக் கையிருப்புகள், அங்கும் உலகெங்கிலும், போதுமான அளவு உள்ளன. எனவே, நாங்கள் மிகவும் சாதகமான நிலையில் இருக்கிறோம்,” என்று கூறினார்.
“நாம் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களைச் செய்ய முடியும். நமது பாதுகாப்புத் தொழில் தளத்தை நாங்கள் அதிவேகமாக வலுப்படுத்தி வருகிறோம்.
இதன் மூலம், உலகம் முழுவதும் நமது அனைத்து செயல்பாட்டுத் திட்டங்களுக்கும் முறையாக நிதி ஒதுக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், மிக விரைவில் 2 மடங்கு, 3 மடங்கு, 4 மடங்கு ஆயுதங்களை நாங்கள் உற்பத்தி செய்ய உள்ளோம்,” என்று அவர் கூறினார்.




