ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய மாலுமிகள் விடுவிப்பு!
ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 10 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்பவுள்ளனர்.
ஈரானின் ஜாஸ்க் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்.வி.ஹார்பர் பீனிக்ஸ் என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை தடுத்து நிறுத்தியது.
அதில் இருந்த இந்திய மாலுமிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் காரணமாக இந்திய மாலுமிகள் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈரானால் விடுவிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் தற்போது பத்திரமாக உள்ளனர்.
அவர்கள் மிக விரைவில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





