அமெரிக்காவைச் சார்ந்திருந்த கொள்கையில் திருப்பம்: பிரான்சுடன் கைகோர்க்கும் நோர்வே!
நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதன் மூலம் தங்களின் ராணுவ உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவை மட்டும் நம்பியிருக்காமல், ஐரோப்பாவின் தன்னாட்சி அதிகாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் அணுசக்தி பாதுகாப்பு வளையத்தில் இணைய நோர்வே சம்மதம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பிரான்ஸின் அணுஆயுத உத்திகளில் நோர்வே முக்கியப் பங்காற்றும், அதேவேளை அமைதிக்காலத்தில் அந்நாட்டின் நிலப்பரப்பில் அணுஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படாது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், போலந்து மற்றும் லிதுவேனியாவைத் தொடர்ந்து நோர்வே யும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளது.
இந்த முயற்சி நேட்டோ அமைப்பின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கு வலுசேர்ப்பதுடன், ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவினங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வழிவகுக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம், அட்லாண்டிக் கடந்து அமெரிக்காவைச் சார்ந்திருந்த நோர்வேயின் பழைய வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.





