களுத்துறையில் துப்பாக்கிச்சூடு!
களுத்துறை, பள்ளிவாசல் வீதிக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
இதில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.





