ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஓட்டும்போது இந்த தவறை செய்தால் 35 யூரோ அபராதம்!

பிரான்ஸில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் பொழுது இசையை ஒலிக்கச் செய்தல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் செயற்பாடுகளை செய்யும்பொழுது அபராதம் விதிக்கப்படும்.

இந்த செயன்முறை வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

அதாவது வாகனம் ஓட்டும் போது சாரதிகள் வேறு எந்த செயற்பாடுகளை செய்தாலும் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை முதல் மூன்று முறை குற்றம் இழைப்பவர்களுக்கு பொருந்தும்.

மூன்று முறையை தாண்டி அதே தவறை செய்யும் பொழுது அபராதத்தை தாண்டி வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம்.

இதேவேளை பிரான்ஸில் போக்குவரத்து அபராதங்கள் கடுமையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டும் குறிப்பிட்ட செயல்களுக்கு மிக உயர்ந்த, இலக்கு வைக்கப்பட்ட அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

அதேபோல்  வாகனம் ஓட்டும்போது உங்கள் கைபேசியை கையில் வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது தானாகவே €135 அபராதத்திற்கும், உங்கள் உரிமத்தில் உள்ள புள்ளிகளை உடனடியாக இழப்பதற்கும் வழிவகுக்கும்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!