ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!
IPL தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கடைசி அணியாக play-off சுற்றில் கால்பதித்து இருந்தது.
அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து play-off சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
நடப்பு தொடரின் லீக் சுற்றில் 2 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஹைதராபாத் அணி வீழ்த்தி உள்ளது.
இதனால் நாக் அவுட் சுற்றில் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து மிரட்டியது.
ஆனால் அதன் பின்னர் விளையாடிய 8 ஆட்டங்களில் 6-ல் தோல்வி அடைந்தது.
எனினும் அதன் பின்னர் சுதாரித்துக் கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் கடைசி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றில் நுழைந்தது.




