அரசியல் இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் பரபரப்பு: புதிய கட்சி ஆரம்பித்தார் பொன்சேகா!

புதியதொரு கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், வருட இறுதி முதல் அக்கட்சி ஊடான நடவடிக்கை இடம்பெறும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“எமது கட்சியில் எவ்வாறானவர்களை இணைக்க வேண்டும் என நாம் வகுத்த நிர்ணயங்களுக்கமைய 75 சதவீத பணி நிறைவு பெற்றிருகின்றது.

நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய நபர்கள் பற்றிய தேடுதல் தற்போது இடம்பெறுகின்றது.

ஆரம்பத்தில் நானே கட்சிக்கு தலைமை வகிப்பேன். அதன்பின்னர் சிறந்தவர்களுக்கு இடமளிக்கப்படும். நான் 100 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடமுடியாதுதானே?

அரசாங்கம் வலுவாக பயணித்தால் எமது ஆதரவு வழங்கப்படும். ஆனாலும் சிறந்த மாற்று சக்தியொன்றும் இருக்க வேண்டும். தற்போது எதிரணியில் இருக்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.” – என்றார் பொன்சேகா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!