நடுவர்களை கதற விட்ட இலங்கை பெண் : மிரண்டுப் போன சேரன்!
மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சிக்கு இலங்கை பெண் ஒருவர் தேர்வாகியுள்ளார்.
‘ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும்.

ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் போட்டியாளர்களின் நடிப்பை மதிப்பீடு செய்து வழிகாட்டி வருகின்றனர்.
நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

அந்த வகையில் நிவேதிகா ராசையா என்ற இலங்கை பெண் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி நடுவர் சேரணையே கண்ணீர் சிந்த வைத்தார். அரங்கமே அவரின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டது.
நிவேதிகாவின் ஆழமான நடிப்பு மட்டும் இல்லை ஹெல்மட் போடாமல் ஏற்படும் விபத்து குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது பாராட்டப்பட்டது.
இலங்கையில் இருந்து சென்று சினிமாவில் சாதிக்க துடிக்கும் இவர் மகா நடிகை சீசன் 2வில் வெற்றிப்பெற வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.





