உலகம்

எபோலா தொற்று பற்றிய போதிய தெளிவின்மை : கட்டுப்படுத்துவதில் சிரமம்!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் மையப் பகுதியில் வாழும் மக்கள்  எபோலா வைரஸ் பற்றிய போதிய விளக்கத்தை கொண்டிராதமையால் நோயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ActionAid DRC நடத்திய மதிப்பாய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அங்கு வசிப்பவர்களில் 64 சதவீதம் பேர் மட்டுமே எபோலா உண்மையானது என நம்புவதாக தெரியவந்துள்ளது. ஏனையோர் அதனை பொய்யாக கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே குறித்த வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 200இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல் ஏறக்குறைய 1000 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!