ஐரோப்பா

UKவில் சிறை கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : புதிய ட்ரோன் கலாசாரத்தால் நெருக்கடி!

போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சிறைகளில் போதைப்பொருள் வியாபாரிகள் தண்டனையின்றி செயல்படுவதாக பிரித்தானியாவின் சிறைச்சாலைகளின் தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர்  ( Charlie Taylor) எச்சரித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025-இல்   இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் 48 போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இது 2010-ஆம் ஆண்டில் இருந்ததை விட 2,300 ஆல் அதிகரித்துள்ளது. சிறைகளுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதே இந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாகும்.

இந்நிலையில் ட்ரோன் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவது உட்பட, அவசரமான, பல்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு டெய்லர்  வலியுறுத்தியுள்ளது.

தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் சிறையிலிருந்து வெளியே வருவார்களா என்று கவலைப்பட வேண்டிய நிலை வரக்கூடாது என்றும் சிறைகளுக்கு அதிக பாதுகாப்புகளை வழங்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!