இலங்கை

வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய கைதி தற்கொலை!

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

தீர்ப்பினை ஆராய்ந்த கொழும்பு நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதன்படி நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் குறித்த கைதி இன்று அதிகாலை உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!