ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வந்துள்ள EES திட்டம் – நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்!

ஐரோப்பிய நாடுகளில் மின்னணு (பயோ மெட்ரிக்) அமைப்பிலான சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் நீண்ட காத்திருப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

படகுப் பயணிகள் எல்லைச் சோதனைகளுக்காகத் துறைமுகத்தில் குறைந்தது 90 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பலர், துறைமுகத்திற்குள் நுழைவதற்கே கூடுதலாக இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இது M20 மற்றும் A2 போன்ற சுற்றியுள்ள சாலைகளில் “முழுமையான போக்குவரத்து நெரிசலை” ஏற்படுத்துகிறது.

கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சோதனை செய்யப்படும் EES செயற்திட்டம் காரணமாகவே நீண்ட தாமதங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸின் எல்லைப் பகுதிகளில் இந்த முறை நிறுவப்படாமையினால் அங்கு பயணிகள் எல்லைக் காவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!