சீனாவில் கனமழை : 24 பேர் உயிரிழப்பு!! மக்களுக்கு எச்சரிக்கை!
சீனாவில் கனமழை தொடங்கியதிலிருந்து குறைந்தது 24 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செவ்வாயன்று 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஹுபேய் (Hubei), ஹுனான் (Hunan) மற்றும் குய்ஜோ (Guizhou) மாகாணங்களில் மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணமான ஹுபேயில், அவசரகால மற்றும் இராணுவப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் சாலைகள் அழிவடைந்துள்ளதாகவும், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வரும் வாரங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





