இலங்கை

அவதானம்: மண்சரிவு அபாய எச்சரிக்கை

பலத்த மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, அயகம மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுக்கும் மூன்றாம் நிலைக்குரிய, மண்சரிவு அதிஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் மண்சரிவு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!