ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை : பெலாரஸுக்கு அணுவாயுதங்களை மாற்றும் ரஷ்யா!!
ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுடன் மூன்று நாள் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் இரகசிய நகர்வுகளை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் இந்தப் பயிற்சிகள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும்.
கீவ் மீது ரஷ்யா ஒரு புதிய தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். பெலாரஸின் ஆழமான ஈடுபாடு அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள சூழ்நிலையில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




