இங்கிலாந்தில் 05 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவச பஸ் பயணம்
இங்கிலாந்தில் ஒகஸ்ட் மாதம் முதல், உள்ளூர் பஸ்களில் 05 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என நிதி அமைச்சர் அறிவிக்க உள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கருத்திற்கொண்டு, சுமார் £100 மில்லியன் மதிப்பிலான இந்த இலவசப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தொழிற்கட்சி அரசாங்கம் பிஸ்கட் மற்றும் உலர்ந்த பழங்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கான சுங்க வரிகளையும் தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க பல்பொருள் அங்காடிகளிடம் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் முட்டை மற்றும் பால் போன்ற பொருட்களுக்கு கட்டாய விலை வரம்பு விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, வரி மற்றும் ஒழுங்குமுறைச் சுமைகளை குறைக்க வேண்டும், என Marks & Spencer நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.




