உச்சபட்ச வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியர்கள் அதிகரித்த வெப்ப அலையை சமாளிக்க தயாராக வேண்டும் என மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வார இறுதியில் வெப்பநிலையானது 31°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வரும் புதன் கிழமை வரை உச்சபட்ச வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை சுகாதாரப் பாதுகாப்பு முகமை இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களால் 2050 ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வானது 300 சதவீதத்தால் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




