உலகம் செய்தி

போரால் இஸ்ரேல் விமான நிறுவனத்துக்கு பேரிழப்பு!

ஈரான் மீதான போர் நடவடிக்கைகளின் காரணமாக, இஸ்ரேலின் தேசிய விமான சேவை நிறுவனமான ‘எல் அல்’ (El Al) கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

போர்ச் சூழல் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டதால், வணிக ரீதியிலான பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதன் விளைவாக, நடப்பு ஆண்டின் முதலாவது காலாண்டில் மட்டும் ‘எல் அல்’ நிறுவனம் சுமார் 67 மில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியின் லாபத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 27 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

வான்வெளி முடக்கத்திற்கு மேலாக, சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் நாணய மதிப்பு மாற்றம் (Exchange Rate Fluctuations) போன்ற காரணிகளும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

தொடர்ச்சியான இந்த போர்ச் சூழலால், ‘எல் அல்’ விமான நிறுவனம் ஒட்டுமொத்தமாக சுமார் 145 மில்லியன் டாலர் வரை பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக முதற்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!