சேனல் 4 நிகழ்ச்சியில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் – விசாரணை தீவிரம்
சேனல் 4-இன் ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட்’ (Married at First Sight ) UK நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகவலை வெளியிட்டுள்ளது.
பிபிசி பனோரமா விசாரணையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண் தனது சம்மதம் இல்லாத பாலியல் செயலுக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நலனில் ஒளிபரப்பாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஃப்காம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, விடுமுறை சேவை நிறுவனமான Tui தனது நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும், சேனல் 4, MAFS UK நிகழ்ச்சியின் அனைத்து அத்தியாயங்களையும் தனது ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளிலிருந்து நீக்கியுள்ளது.
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் நலன் தொடர்பாக வெளிப்புற ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியை தயாரிக்கும் CPL நிறுவனம், தங்களது நலத்திட்ட நடைமுறைகள் தொழில்துறையில் உயர்ந்த தரத்தில் இருப்பதாகவும், அனைத்து வழக்குகளிலும் முறையாகச் செயல்பட்டதாகவும் கூறியுள்ளது.





