ஐரோப்பா செய்தி

எபோலா தொற்றுதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் – லண்டன் தொற்று நோய் பகுப்பாய்வு மையம்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா நோய், எதிர்பார்க்கப்பட்டதை விடவும்
வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுவரை சுமார்131 பேர் உயிரிழந்துள்ளதுடன், 513 க்கும் மேற்பட்ட தொற்றுகள் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் உள்ள எம்ஆர்சி தொற்று நோய் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட ஆய்வில், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறியாதது, மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் சுகாதார அமைப்புகள் சிரமமடைந்திருப்பது போன்ற காரணங்களால் நோய் வேகமாகப் பரவி வருவதாக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெகெடி மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நோய்ப்பரவலின் வேகமும் அளவும் குறித்து ஆழ்ந்த கவலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!