அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டுக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க சஜித் அழைப்பு!

“மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தமதுரையில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு ,

“யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளின் வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கு எனது விசேட மரியாதையைச் செலுத்திக் கொள்கின்றேன்.

யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வேதனையை நான் அறிவேன். பயங்கரவாத யுத்தத்தினாலேயே நானும் எனது தந்தையை (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ) இழந்தேன். இதனால் எனக்கும் அந்த வேதனை நன்றாகவே புரியும்.

‘இராணுவ வீரர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த நாம் தயங்கக் கூடாது.

அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு யுத்தம் நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு இனப்பிரிவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தீர்வுகளை மீளக்கட்டியெழுப்புதல், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் மூலம் எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும்.

வருடாந்தம் ஜெனிவாவுக்குச் சென்று பேசுவதை நிறுத்தும் வகையில், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என நான் யோசனை முன்வைக்கின்றேன்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிய இடத்தை வெறும் ரணவிரு சேவா அதிகார சபை ஊடாக மாத்திரம் பெற்றுக்கொடுக்க முடியாது.

எனவே, அமெரிக்காவைப் போன்று பிரத்தியேகமானதொரு திணைக்களத்தை நிறுவி, படை வீரர்களின் நலன்புரித் திட்டங்களை விரிவான முறையில் முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!