ஸ்பெயினில் பரபரப்பு – தனது பெற்றோரை சுட்டுக் கொன்ற இளைஞர்!
ஸ்பெயினின் அல்மேரியா (Almeria) மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 04 பேர் காயமடைந்துள்ளனர்.
25 வயதுடைய தாக்குதல்தாரி தனது பெற்றோரை சுட்டுக் கொன்றதுடன், தனது மகன் உட்பட நான்கு பேரை காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறதுது.
அதேநேரம் குறித்த இளைஞர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்தும், சந்தேக நபரிடம் துப்பாக்கி உரிமம் இல்லாததால் அவர் பயன்படுத்திய துப்பாக்கி எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




