உலகம்

சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே அமைதியின்மைக்கு முக்கியக் காரணம் – தைவான் அதிருப்தி!

சீனாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளே பிராந்தியத்தில் அமைதியின்மை மற்றும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று தைவானின் பிரதமர் சோ ஜுங்-டாய் (Cho Jung-tai ) தெரிவித்துள்ளார்.

சீனக் கடற்படை பயிற்சிக்காக ஒரு விமானம் தாங்கி கப்பல் படையை மேற்கு பசிபிக் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சீன மக்கள் குடியரசு, தைவான் ஜலசந்திப் பகுதி, இந்தோ-பசிபிக் பகுதி, தென் சீனக் கடல் மற்றும் ஜப்பானைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட பல்வேறு அளவுகளிலும் வகைகளிலும் இராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி, கடல்வழிப் பயணப் பாதுகாப்பைப் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

“இதுவே பிராந்தியத்தில் அமைதியின்மைக்கும் ஸ்திரத்தன்மையின்மைக்கும் மிகப்பெரிய காரணமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஆயுதப் படைகள் தைவானைச் சுற்றி ஏறக்குறைய தினந்தோறும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!