உலகம்

வரலாறு காணாத ரீதியல் உச்சம் தொட்ட எரிபொருள் விலை – கென்யாவில் போராட்டம்!

கென்யாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

அத்துடன் பொதுப் போக்குவரத்து முடங்கிய நிலையில்  பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டு இணையவழிக் கல்வி முறை அமுற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டீசல் விலை 23.5 சதவீதத்தாலும்,  பெட்ரோல் விலை 8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வுகளால் அனைத்துப் பொருட்களும் சேவைகளும் பாதிக்கப்படும் என்று கென்யா தேசிய வர்த்தக மற்றும் தொழில் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இந்த விலை உயர்வுக்கு இந்த விலை உயர்வுக்கு உள்நாட்டுச் செலவினக் குவிப்பே  முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் விலை உயர்வு குறித்து ஜனாதிபதி மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!