இந்திய பிரதமர் மோடி ஸ்வீடனுக்கு விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று ஸ்வீடனுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மோடி ஸ்வீடனுக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இந்தியா மற்றும் ஸ்வீடன் உறவுகளை குறித்து விரிவாக கலந்துரையாடுவார்கள்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் பசுமை ஆற்றல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) விண்வெளி திட்டங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் போன்ற துறைகளிலும் இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடலம் இடம்பெறும் என கூறப்படுகிறது





