காங்கோ மக்களை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று – அவசரநிலை அறிவிப்பு!
காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் மூன்று சுகாதார மண்டலங்களில், நேற்று (16) எட்டு நோய்த்தொற்றுகள், மற்றும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 246 பேர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை உகாண்டாவின் கம்பாலாவில், மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் காங்கோ குடியரசிலிருந்து வந்த இரண்டு உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் கம்பாலாவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மக்கள் நடமாட்டம், வர்த்தகம் மற்றும் பயணத் தொடர்புகள், மற்றும் தொடர்ச்சியான நோய்ப்பரவல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக, காங்கோ குடியரசுடன் தரை எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளில் இந்த நோய் மேலும் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




