காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!
காங்கோவின் இடுரி (Ituri) மாகாணத்தில் ஒரு புதிய எபோலா பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த பரவலால் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காங்கோவின் முந்தைய எபோலா தொற்றுநோய் முடிவடைந்து 05 மாதங்களுக்கு பிறகு தொற்றுபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், 1976-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஏற்படும் 17-வது வைரஸ் பரவல் இதுவாகும்.
எபோலா என்பது உடல் திரவங்கள் மூலம் பரவும், எளிதில் தொற்றக்கூடிய மற்றும் பெரும்பாலும் மரணத்தை விளைவிக்கக்கூடிய ஒரு வைரஸ் ஆகும்.
காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.





