ட்ரம்பின் விஜயத்தையடுத்து சீனாவில் களமிறங்குகிறார் புடின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் விரைவில் பெய்ஜிங்கில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், சீனப் பயணம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியும் அங்கு செல்கின்றமை ராஜதந்திர வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.





