செய்தி விளையாட்டு

சதமடித்தார் Virat Kohli : முதலிடம் பிடித்தது RCB!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 57ஆவது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தாமதமாகவே தொடங்கப்பட்டது.

எனினும், ஓவர்கள் குறைக்கப்படாமல் இரவு 8.45 மணி அளவில் சற்று தாமதமாக தொடங்கியது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி ,முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றது.

193 ஓட்டங்கள் என்ற இலக்கை ஆர்சிபி இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது.

கடைசி நான்கு ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த அணியின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. 17-வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்தது ஆர்சிபி. அடுத்த ஓவரில் 9 ஓட்டங்களை எடுத்தது.

இருப்பினும் டிம் டேவிட் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் சதம் விளாசினார் விராட் கோஹ்லி. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு 9-வது சதமாக அமைந்தது.

19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஆர்சிபி. 12 ஆட்டங்களில் 8 வெற்றி உடன் 16 புள்ளிகளை அந்த பெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!