இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட படகு விபத்து – 14 பேர் மாயம்!!
இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் மாயமாகியுள்ளதாக மலேசிய கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேராக் (Perak ) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Pangkor) தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இணைந்து மீட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மே 9 அன்று இந்தோனேசியாவின் கிசரானில் (Kisaran) இருந்து புறப்பட்டது தெரியவந்துள்ளது.
அவர்கள் பினாங்கு (Penang), தெரெங்கானு (Terengganu), சிலாங்கூர் (Selangor) மற்றும் கோலாலம்பூர் (Kuala Lumpur) உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





