உலகம் செய்தி

பிரதமரின் உரையில் அடிப்படை தீர்வுகள் பற்றிய விளக்கம் போதாது – UNISON தலைவர் குற்றச்சாட்டு

பிரதமர் Starmer இன்று ஆற்றிய உரையை பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூனிசன் (UNISON) அமைப்பின் பொதுச் செயலாளர் ஆண்ட்ரியா ஈகன் (Andrea Egan) விமர்சித்துள்ளார்.

நிலைமையைச் சரிசெய்வதற்கான அடிப்படையான தீர்வுகள் குறித்து மிகவும் குறைவாகவே பேசப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தின் வேகம் போதுமானதாக இல்லை என்பதை ஸ்டார்மர் ஒப்புக்கொண்டது சரியானது என கூறிய அவர் மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மாற்றத்தின் அவசியத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார் என்பதை அவரது உரை காட்டவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வெறும் தலைமை மாற்றம் மட்டும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

1997ஆம் ஆண்டிலிருந்து தொழிற் கட்சி தனது பாரம்பரிய ஆதரவை இழந்து வருவதாகக் கூறிய அவர், கட்சி தனது அடிப்படை சமூக ஜனநாயக அடையாளத்தை இழந்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொழிற் கட்சி ஒரு வலுவான அரசியல் சக்தியாக இல்லாமல் போவது, பிரித்தானிய அரசியலுக்கு “பேரழிவாக” அமையும் என்றும் யூனிசன் (UNISON) அமைப்பின் பொதுச் செயலாளர் ஆண்ட்ரியா ஈகன் எச்சரித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!