ஜப்பான் ரயில் பெட்டியில் தெளிக்கப்பட்ட மர்மப்பொருள் – பயணிகளுக்கு நேர்ந்த துயரம்!
ஜப்பானில் ரயிலில் பயணித்த 10 பேர் திடீரென நோய்வாய்ப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் தெளிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே பயணிகள் நோய்வாய்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பயணிகள் விசித்திரமான வாசனை மற்றும் தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றை எதிர்கொண்டதாக முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் கவாசாகி நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் ரயிலின் பெட்டியை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் தீங்கு விளைவிக்கும் வாயு எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





