அமெரிக்காவுடனான இராணுவ உறவை முறிக்க நெதன்யாகு விருப்பம்!
வளைகுடா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இஸ்ரேல் முனைந்து வரும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அமெரிக்காவின் இராணுவ ஆதரவிலிருந்து இஸ்ரேலை விடுவிக்க விரும்புவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நேற்று ஒளிபரப்பான பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ” அமெரிக்காவின் நிதி ஆதரவை நான் பூஜ்ஜியத்திற்குக் குறைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஆண்டுக்கு சுமார் 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இராணுவ உதவியைப் பெற்று வருவதாக கூறிய அவர், 2018 முதல் 2028 வரை இஸ்ரேலுக்கு மொத்தம் 38 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அமெரிக்க-இஸ்ரேலிய நிதி உறவை மறுசீரமைக்க இதுவே சரியான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





