ஆர்.சி.பியை வீழ்த்துமா லக்னோ?
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 50 ஆவது லீக் ஆட்டத்தில் Lucknow Super Giants , Royal Challengers Bengaluru ஆகிய அணிகள் மோதுகின்றன.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான RCB அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
நடப்பு தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோத உள்ளன.
கடந்த ஏப்ரல் 15-ம் திகதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் RCB அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றிருந்தது.





