இலங்கை செய்தி

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு குறித்து ஆராய்வு!

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இன்று (06) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர்.

வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் அரச ஊழியர்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அரசின் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக உலக வங்கியின் ஆதரவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்காக ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘ பொது நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின்’ செயல்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இந்த நிறுவனத்துடன் உலக வங்கி இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் நேர்மையைப் பேணுவதற்காக நிறுவப்பட்டுள்ள ‘உள்ளக விவகாரப் பிரிவு’ சார்ந்த வேலைத்திட்டங்களில் உலக வங்கி பிரதிநிதிகள் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது மேலதிகமாகக் கலந்துரையாடப்பட்டது.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan), சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களான ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker), அந்தனி ஒபேசேகர (Anthony Obesekere) மற்றும் நிர்வாக விசேட நிபுணர் டில் ஹார்ட்மேன் (Till Hartman) ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!