உலகம் செய்தி

ஈரான் நிபந்தனைகளை ஏற்காவிடின் உக்கிர தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக் கொண்டால், போர் முடிவடையக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரான் இந்த உடன்படிக்கைக்கு இணங்கத் தவறினால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அடுத்தகட்ட முடிவே பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என அமெரிக்கா கருதுகின்றது.

எனினும், அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு அடிபணியப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஈரான் உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் தீவிரம் காட்டிவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!