அரசியல் இலங்கை செய்தி

“யாழ்ப்பாணத்தை தமிழகத்திடம் கொடுத்துவிடுங்கள்” – அர்ச்சுனா எம்.பி.

” கச்சத்தீவை மட்டும் அல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்துவிடுங்கள்.” – என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. கூறியவை வருமாறு,

” தமிழ் மக்களின் இதயத்தை கவர்த்த தமிழக முதல்வர் விஜய்க்கு முதலில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் தீவு பகுதிகளுக்கு மின்சாரம் இல்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

நெடுந்தீவுக்கு அண்மையில் நான் சென்றபோது அங்கு 50 சதவீதமான மக்களுக்கு மின்சாரம் இல்லை. 7 நாட்களில் 5 நாட்களுக்கு மின்சாரம் இல்லை.

கச்சத்தீவை விஜய் கேட்டார் என்பதற்காக அதனை தரமுடியாது என NPP அரசாங்கம் கூறியது.

கச்சத்தீவை மட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்துக்கு கொடுத்து விடுங்கள். தமிழக மக்கள் எங்களை பார்த்துக்கொள்வார்கள்.’ – என்றார் அர்ச்சுனா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!