இலங்கை தமிழர்களுக்கு தவெக ஆதரவு தொடரவேண்டும்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.” – என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், ஈழத் தமிழர்களின் விவகாரங்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுமந்திரனின் இந்த வாழ்த்துச் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





