இலங்கை முக்கிய செய்திகள்

VAT வரியை அதிகரிக்க முன்மொழிவு – புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை  நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின்படி,  ஜூலை 1 முதல் மின்னணு தளங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு VAT வரி அறவிடப்படும். இதற்காக டிஜிட்டல் சேவைகள் மீதான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பிரதான சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரி விதிக்கத்தக்க காலப்பகுதியின் முடிவில், இலங்கைக்குள் பொருட்கள் அல்லது சேவைகளின் விநியோகத்தின் மொத்த மதிப்பு 9 மில்லியன் ரூபாயைத் தாண்டியிருந்தால், அந்த நபர் வரிக்காகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

அதேபோல், நிதிச் சேவைகள் மீதான VAT வரி வீதத்தை தற்போதுள்ள 18 சதவீதத்திலிருந்து 20.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!