மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி -இராணுவச் சிறையில் தடுத்து வைப்பு
மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி Aung San Suu Kyi, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு தலைநகர் Naypyidawவில் உள்ள இராணுவச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், புரட்சியை வழிநடத்திய இராணுவத் தலைவர் Min Aung Hlaing வெளியிட்ட அறிக்கையில், “அவரது மீதமுள்ள தண்டனை குறைக்கப்பட்டு, அவருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் அதை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் அறிமுகமான பின்னர், ஆங் சான் சூ கீ 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்பு, அவர் பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ஆதரவாளராக செயல்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், அரசு ஊடகங்கள் வெளியிட்ட படங்களில், அவர் சீருடை அணிந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமர்ந்திருப்பது காணப்பட்டது.




