சுரேஷ் சலே விவகாரம் : களமிறங்கும் மனித உரிமை ஆணைக்குழு!
தடுப்பு காவலில் உள்ள சுரேஷ் சலே பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் இன்று (16) வாக்குமூலங்கள் பெறப்படும் என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ தெரிவித்தார்.
சுரேஷ் சலே தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் ஒரு பொது அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்த அறையில் முறையான காற்றோட்டம் இல்லாதது உட்பட பல பொதுவான அடிப்படைக் குறைபாடுகள் காணப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.




