இலங்கை செய்தி

பிரான்ஸ் விரைகிறது சிஐடி குழு? நடக்கப்போவது என்ன?

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் CID ஷானி அபேசேகர Shani Abeysekera உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான, புலனாய்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் குழு பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது வெளிநாட்டில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் விசாரணை நடத்துவதே அவர்களின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விரிவான விசாரணையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மற்றும் வெளிப்படுத்தல்கள் குறித்து, அசாத் மௌலானாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் வாக்குமூலங்களையும் விளக்கங்களையும் கோரி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!