ICE இன் பெயரை மாற்ற ட்ரம்ப் திட்டமிடுகிறாரா?
அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையை (ICE) “தேசியக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை” (NICE) எனப் பெயர் மாற்றுவதற்கான பரிந்துரையை டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.
ஆதரவாளர் ஒருவரால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தை தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டு தனது ஆதரவை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், குடிவரவு தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் மினியாபோலிஸில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மரணங்கள் உட்பட, ICE-இன் செயல்பாடுகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பெயர் மாற்ற முன்மொழிவு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





