சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தைக் கடந்தது
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8,40,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 8,40,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். இதன்படி, வருகை தந்த இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை 1,76,465 ஆகும்.
பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஏப்ரல் மாத தொடக்கம் முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 99,777 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாளந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.




